புதுக்கோட்டை, ஜன.28- ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக் கணிக்கப்படுவதாக பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முக சுந்தரம் கூறினார். பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற் காக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் மூலமாக பல்வேறு திட்டங்கள் வேளாண்மை துறை, தொழில்துறை, தாட்கோ, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டங்களின் முழு பயன்பாட்டி னையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத் துறை அலு வலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் சண்முகசுந்தரம் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டிற்கு ர யில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படு கின்றன. விமான நிலையங்கள் விரிவாக்கத் திற்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை. வெளிநாட்டு நிறுவ னங்கள் முதலீடு செய்வதற்கு தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.