அறந்தாங்கி, டிச.9 - புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத் தால் ஞாயிறன்று புதுக்கோட்டை தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப் பட்டன. இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத் தைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியானது 6 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
இதில் 9 வயதிற்குட்பட்டோ ருக்கான பிரிவில் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கே.சன்மதி, நான்கு சுற்றிலும் முதலிடம் பெற்று கோப்பையை வென்றார். இந்த வெற்றியின் மூலம் திருச்சியில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு மாணவி சன்மதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாண வியை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கல்வி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.