புதுக்கோட்டை, ஆக.22- புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலகக் கூட்டரங்கில், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திங்களன்று வழங்கினர். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியது: விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களின் படிப்பிற்கும் மற்றும் உடற்பயிற்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பேசும்போது, இன்றையதினம் புதுக் கோட்டை மாவட்டத்தில் 8,430 மாணவர்களுக்கும், 9,324 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கப்படுகிறது. இந்த விலையில்லா மிதி வண்டிகள் மூலம் மாணவ, மாணவியர்கள் பள்ளி களுக்கு சரியான நேரத்திற்கு சென்று வருவதுடன், உடல் நலத்தையும் பேணி காக்க முடியும். எனவே மாணவ, மாணவியர்கள் விலையில்லா மிதிவண்டி களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள காரையூர், சடையம்பட்டி, ஆல வயல், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல் நிலைப்பள்ளி, பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி களை மாணவ. மாணவியர்களுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.