புதுக்கோட்டை, ஜன.10- புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கக் கோரி பொதுமக்கள் சார்பில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அன்னவாசல் அரசு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசினர். கடந்த 26.9.2022 அன்று இலுப்பூர் வட் டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற சமா தானக் கூட்டத்தில், ஒரு மாதத்திற்குள் அன்னவாசல் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி யும், அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கக் கோரியும், வாரச் சந்தை கடைகளுக்கு உட னடியாக மின் விளக்குகள் அமைத்துத் தரக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.