புதுக்கோட்டை, டிச.10:- உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா செவ்வாய்க் கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, கீழராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர் மன்றத்தை சென்றடைந்தது. இப்பேரணி யில், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை- அறிவியல் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. கலை- அறிவியல் கல்லூரி களைச் சேர்ந்த 250 -க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சே.கி.குணசேகரன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.