புதுக்கோட்டை, மார்ச் 5- வரலாறு காணாத அளவுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டிசல் விலை உயர்வுகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங் கங்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. எரிவாயு சிலிண்டருக்கு பாடைகட்டியும், ஒப்பாரி வைத்தும் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர் தலைவர் ஆர்.நிரஞ்சனா தேவி, வாலிபர் சங்க நகர் தலைவர் ஜீவா, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சுசிலா, தலைவர் எஸ். பாண்டிச்செல்வி, துணைத் தலை வர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், முத்துமாரி, கௌரி, ராமு, தீபக் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
திருச்சிராப்பள்ளி
மாதர் சங்கம்- மாற்றுத்திறனாளி கள் சங்கம் சார்பில் திருச்சி ராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூ ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி. தாலுகா செயலாளர் மல் லிகா குமார், துணைச் செயலா ளர் கிரிஜா மேரி, மாற்றுத்திற னாளிகள் சங்க தாலுகா செயலா ளர் சித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் மல்லிகா உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.