tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கம் ஒப்பாரி போராட்டம்

திருப்பூர், பிப். 23- சமையல் எரிவாயு உருளை ரூ.149 அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எரிவாயு உருளையைச் சுற்றி ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர். திருப்பூர், கல்லம்பாளையத்தில் ஞாயிறன்று இந்த போராட்டம் நடத்தப் பட்டது. இதில் மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.ஷகிலா, தெற்கு மாநகரத் தலைவர் மினி, மாநகரச் செயலாளர் எஸ்.பானுமதி மற்றும் கல்லம்பாளையம் கிளைச் செயலாளர் சிஜி ஆகியோர் எரி வாயு உருளை விலை உயர்வைக் கண்டித் துப் பேசினர். கல்லம்பாளையம் பகுதி மாதர் சங்கத்தினர் பங்கேற்று எரிவாயு உருளையை சுற்றிவந்து விலை உயர்வை எதிர்த்து ஒப்பாரி வைத்து முழக்கம் எழுப் பினர். முன்னதாக கல்லம்பாளையம் கிளை மாதர் சங்க மாநாடு நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.