districts

img

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

அறந்தாங்கி, டிச.22 -  புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை ஏற்க பெற் றோர்கள் கலந்து கொண்டனர். செலக்சன் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ  பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி தொடக்க நிலை  மாணவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தும், ஏஞ்சல்ஸ்களாக வும் பல்வேறு நிலைகளில்  தங்களுடைய திற மைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். சிபிஎஸ்இ பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுருதி  நன்றி கூறினார்.