புதுக்கோட்டை, ஜன.2- புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவி கள் தங்களது பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் கிராமத்தில் உள்ள சூரியா மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு விழிப்பு ணர்வு முகாமை நடத்தினர். முகாமில் ஒன்றிய, மாநில அரசுகள் பெண்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், வரு மானத்தை அதிகரித்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சுய உதவிக்குழுத் தலைவி ஜோதி தலைமை வகித்தார். மகளிருக்கான திட்டங்கள் குறித்த துண்டுப்பிரசுரம் வழங் கப்பட்டது.