பள்ளிபாளையம், ஜன.29- பள்ளி பாளையத்தில் சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்துள்ள வெப்படை, காந்திநகர், கோட்டக்காடு பகுதியில், ஸ்ரீஆஞ்ச நேயா கேஸ் ஏஜென்சி மற்றும் இன்டேன் கேஸ் சார்பில், சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், பொதுமக்களி டம் சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எரிவாயு வெளியேறினால் எத்தகைய அறிகுறி கள் தென்படும்? வெளியேறும் எரிவாயுவை பாதுகாப்புடன் எவ்வாறு அப்புறப்படுத்துவது? உள்ளிட்ட பல்வேறு விவ ரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.