districts

img

அரசுப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கிய முன்னாள் மாணவர்

அறந்தாங்கி, ஜன.24- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு  மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், சாமி வி.லேண்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட், பள்ளியில் கற்பித்தல் பணியை மேம்படுத்துவதற்காக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சுமார்ட் டிவியை  வழங்கினார். இதனை தலைமையாசிரியர் தாம ரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இவை உடனடியாக வகுப்பறையில் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  மேலும் கடந்த ஜன.19 முதல் 21 வரை அறந்தாங்கி யில் மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி. முகாம் சிறப்பு டன் நடைபெற்றது. பள்ளியின் சார்பாக கலந்து கொண்ட 10 மாணவர்களுக்கு பொறுப்பாசிரியர் செல்வ ஷாஜி மற்றும் சிறப்பு விருந்தினர் சாமி வி.வெங்கட் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.