districts

img

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

பொன்னமராவதி, மார்ச்.3- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேலைச்சிவபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு அமைச்சர் ரகுபதி தங்க மோதிரங்களை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க மோதிரங்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார். மேலும் அடைக்கன்குளம் கரையில் நகர செயலாளர் அழகப்பன் தலைமையில் மரக்கன்றுகளை  அமைச்சர் நட்டார். இதோபோல், வலையபட்டி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் உள்ள மருத்துவர்கள், நோயாளிகளுக்கு பால், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை நகர செயலாளர் அழகப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி ஆகியோர் வழங்கினர்.