districts

வி.தொ.ச. புதிய கிளை துவக்கம்

பொன்னமராவதி, ஜன.9 - பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டியில் எம்.கருப்பையா தலைமையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட  பொருளாளர் கே.சண்முகம் சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் புதிய தலைவராக மு.அழகப்பன், செயலாளராக எஸ். ரங்கநாதன், பொருளாளராக எம்.கருப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத் தில் 200 நாட்களாகவும், ரூ.600 சம்பளமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். ஊராட்சியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் பென்சன் வழங்க வேண்டும். குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.