districts

img

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் புதுவை அரசுக்கு ஆட்டோ சங்க மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி,ஜூன் 7- அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று சிஐடியு ஆட்டோ சங்க  மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தி யுள்ளது. புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டு நர்கள், உரிமையாளர்கள் சிஐடியு சங்கத்தின் பிரதேச 7வது மாநாடு சித்தன் குடியில் செவ்வாய்கிழமை (ஜூன் 7)  நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் பிரதேச துணைத் தலைவர் நூர்முகமது தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை மணவாளன் ஏற்றி  வைத்தார்.  தமிழ்நாடு ஆட்டோ சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்க கவுரவத் தலைவர் தா.முருகன், சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன், செயலாளர் சீனிவாசன்,நிர்வாகிகள் மதிவாணன்,ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டு அறிக்கையை பிரதேச செயலாளர் மது (எ) லிங்கேசன்வேலு வாசித்தார்.பொருளாளர் விஐயகுமார் வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய் தார். நிறைவாக தமிழ்நாடு ஆட்டோ சம்மேளன செயல் தலைவர் என்.எஸ். பாலசுப்பிரமணியன் மாநாட்டை நிறைவு  செய்து பேசினார்.
நிர்வாகிகள்
தலைவராக கே. மணவாளன், பொதுச்செயலாளராக எஸ். விஜய குமார், பொருளாளராக குமார் (எ)துள சிங்கம் உள்ளிட்ட 20 பேர் கொண்ட புதுச்சேரி பிரதேச குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
நீண்ட நாட்களாக போராடி வரும்  புதுச்சேரி முறைச்சாரா தொழிலாளர்க ளுக்கு நலசங்கத்தை நலவாரியமாக மாற்றி நலவாரியத்தின் செயல்பாட்டை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். வாகனங்களை புதுபிப்பதற்கான போக்குவரத்துறையால் உயர்த்தப்பட் டுள்ள அனைத்து கட்டணங்களையும் ஒன்றிய பாஜக அரசு குறைக்க வேண் டும். இறந்த வாகன உரிமையாளர்களின் பெயரிலுள்ள வாகன உரிமத்தை புதுபித்து வழங்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எரி பொருளுக்கான மானியம் வழங்க வேண்டும். புதுச்சேரி மின்துறையை தனி யார்மயமாக்கும் முடிவை உடனடி யாக புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக காமராஜர் சிலையிலி ருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் காக்கி சட்டை அணிந்து ஊர்வலமாக மாநாட்டு  அரங்கிற்கு வந்தனர்.