பாபநாசம், டிச.10- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சமூக பாதுகாப்புச் சங்கம் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றி வரும் ஆளுமைகளை தேர்வுச் செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. ஆரணி ராஜன் தலைமை வகித்தார். வினோத் குமார் முன்னிலை வகித்தார். புதுவை சிறைத் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாண்டிச்சேரி சபாநாயகர் செல்வம் பல்வேறு துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கருக்கு சேவா ரத்னா 2024 என்ற விருது வழங்கப் பட்டது. விருதுப் பெற்ற ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கரை, சக ஊராட்சித் தலைவர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.