புதுச்சேரி, அக். 30- மொழியியல் அறிஞர் த.பரசுராமன், எழுத்தாளர் நாகசுந்தரம் ஆகியோரது நினைவு நாளையொட்டி சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி அறி வியல் இயக்கம் சார்பில் நினைவலைகள், கவிதாஞ்சலி, சிறப்பு சொற்பொழிவு என மூன்று அமர்வுகளில் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைபொதுச் செயலாளர் களப்பிரன் கலந்து கொண்டு “இ.பி.கோ. முன்னும் பின்னும்” என்ற தலைப்பில் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம், முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரும் பேசினர். முஎகச புதுச்சேரி பிரதேச தலைவர் உமா அமர்நாத், செயலாளர் மணி.கலியமூர்த்தி, நிர்வாகிகள் கோவிந்தராஜன், லெனின்பாரதி, விநாயகம், பச்சையம்மாள், அன்பழ கன், அறிவியல் இயக்கத் தின் நிர்வாகிகள் மதி வாணன், தட்சணாமூர்த்தி, ஹேமாவதி, மாரிமுத்து, ரமேஷ், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நினைவலை கள், கவிதாஞ்சலி, சிறப்பு சொற்பொழிவு ஆகிய அமர்வுகளில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான எழுத்தாளர்கள் பங்கேற்ற னர்.