districts

img

மழை-வெள்ளத்தால் பழுதடைந்த இடையர்பாளையம் பாலம் சீரமைப்பு

புதுச்சேரி, டிச.7-  பெஞ்சல் புயல் மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி கடலூர் சாலை இடையர்பாளையம் அருகே  பழுதடைந்த பாலம் சீரமைக்கப்ட்டு போக்கு வரத்திற்கு திறந்து விடப்பட்டது. 

பெஞ்சல் புயல் மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுச்சேரியில்  இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையர்பாளையம் அருகே பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. அசம்பா விதங்களைத் தடுக்க  போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களும், அதே போல் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் வடமங்க லம் வழியாக   புறவழி சாலை யில் திருப்பி விடப்பட்டது. 15 கிலோமீட்டர் சுற்றி செல்வதால்  வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்  கடுமையாக  பாதிக்கப்பட்ட னர். 

பழுது நீக்கம் 

   பழுதடைந்த பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்றது. பாலத்தின் பழுது நீக்கப்பட்டு தற்போது முதற்கட்டமாக பேருந்து போக்குவரத்தும், இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாக னங்கள் சொல்ல அனு மதிக்கப்பட்டது.  கனரக வாகனங்கள் சரக்கு வாக னங்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு அனுமதிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக சனிக் கிழமை (டிச.7) காலை வாகன போக்குவரத்தை சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யின் போது  பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்  ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்  ஜெயராஜ் இளநிலைப் பொறியாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள்  மோகன் குமார், பக்த வச்சலம் ஆகியோர் உடனி ருந்தனர்.