2005 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 30 செ.மீ., மழை பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காரைக்காலில் நேற்று காலையில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை தீவிரமடைந்து அதி கனமழையாக நள்ளிரவு வரை நீடித்தது. 24 மணி நேரத்தில் 26 செ.மீ., மழை பொழிந்தது. இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 30 செ.மீ., மழை பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. 15 ஆண்டுகள் கழித்து காரைக்காலில் நவம்பரில் அதிக மழை பதிவாகி உள்ளது.