புதுச்சேரி, டிச.11- பிற மாநிலங்களில் வழங்கு வதைப்போல் காது கேளாதோருக்கு இருசக்கர மோட்டார் வாகன உரிமம் புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் காதுகேளாதோருக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருவது போல், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காது கேளாதோருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காது கேளாதவர்கள், சுய போக்குவரத்து இல்லாமல் பெரிதும் பாதித்து வருகிறார்கள். எனவே, வாழ்வாதாரம் இழந்தும் சிலர் தவிக்கிறார்கள். புதுச்சேரி அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரியை சிபிஎம் புதுச்சேரி நகர கமிட்டி சார்பில் முறையிடப்பட்டது.
பின்னர் இது குறித்து அதிகாரியிடம் ஆலோசித்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் உறுதி அளித்தனர். இச்சந்திப்பின்போது சிபிஎம் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் சரவணன் மற்றும் நகர குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.