districts

img

புதுச்சேரியில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறக்க வேண்டும் விவசாயிகள் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி,ஆக.22- மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை உடனடியாக திற க்க வேண்டும் என்று அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 14வது மாநாடு தோழர்கள் கே.வரதராஜன், காரை.இராமகிருஷ்ணன் நினைவரங்கம் பி.எஸ்.பாளையத்தில் நடை பெற்றது. சங்கத்தின் பிரதேசத் தலைவர் எஸ்.ராம மூர்த்தி தலைமை தாங்கி னார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்புரமணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் இரகு. அன்புமணி, அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் த.தமிழ்ச் செல்வன், கரும்பு விவசாயிகள் சங்க கரவத்தலைவர் வி.வடி வேல் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். பிரதேச செயலாளர் வே.சங்கர் வேலை அறிக்கை சமர்பித்தார். பொரு ளாளர் முத்துலிங்கம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ் மாநில துணைச் செயலாளர் ஜி.மாதவன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில், 22 பேர்கொண்ட புதிய பிரதேசக்குழுவின் தலை வராக எஸ்.ராமமூர்த்தி, செய லாளராக வே.சங்கர், பொரு ளாளராக சதாசிவம் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
வேளான் விளை பொருட்களுக்கு குறைந்த பட்சஆதார விலை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். விவ சாயிகள் குறைதீர் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். இல வச அரிசிக்கு விவசாயி களிடமிருந்தே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்விவசாய இடுப் பொருட்களாக உரம், விதை, பூச்சிக் கொள்ளி மருந்து ஆகியவை புதுச்சேரி அரசின் பேசிக் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும்.  மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும், திருக்கனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வெறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.