districts

img

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்க சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆக. 16- நாட்டின் 75ஆவது சுதந்திரதின விழா புதுச்சேரியில் வண்ணமிகு கலைநிகழ்சியுடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே நடை பெற்ற விழாவில் முதல்வர் என்.ரங்க சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை யின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் ளுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
ஆதிதிராவிடர் நலன 
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்க சாமி ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும் செயல் படுத்தப்படுகிறது. மீன் உற்பத்தியை பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செம்மையாக செயல் படுத்தி வருகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத் திட்டங்களை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வரு கிறது. நிலமற்ற ஏழை மக்க ளுக்கு கடந்த ஓராண்டில் 115 இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத் தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. கொ ரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
விமான நிலைய விரிவாக்கம்
புதுச்சேரிக்கு பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுப்படுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவை பகுதி யில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும். இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசி டம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும் போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல் சேவையை அரசு வழங்கி வருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப் படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன. அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வரு வதாகவும் 7வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, காலகட்ட பதவி உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியுள்ளதாக முதல்வர் கூறினார். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் எங்கள் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வருங்காலத்தில் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்து வதில் அரசு முனைப்பாக உள்ளது என்று பெரு மிதத்துடன் முதல்வர் கூறினார். இறுதியாக பள்ளி மாணவர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இவ்விழாவில் சட்டப் பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், நமச் சிவாயம், எதிர்கட்சி தலை வர் சிவா, சட்டமன்ற உறுப்பி னர்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஏனாம் பிரதேசத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன், மாஹேவில் அமைச்சர் சர வணன்குமார், காரைக் காலில் அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.