districts

img

எதை மறைக்கிறது வனத்துறை: ஊடகவியலாளர்கள் போராட்டம்

பொள்ளாச்சி, டிச. 9- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்துறையி னர், ஊடகத்தினருக்கு எவ்வித தகவலையும் தெரிவிப்ப தில்லை என குற்றம்சாட்டி, ஊடகவியலாளர்கள் போராட்டத் தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட் டம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு முறையான தகவல் கள் தருவதில்லை. எந்த நிகழ்வுகளுக்கும் அழைப்ப தில்லை. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் என்ன நடை பெறுகிறது என்பது வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரி விப்பதில்லை. இதனை கண்டித்து பொள்ளாச்சி பத்தி ரிகையாளர்கள் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட னர். இதனையடுத்து, பொள்ளாச்சி வனக்கோட்ட இணை  இயக்குனர் பார்கவ் தேஜா பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். 

இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆனைமலை புலிகள்  காப்பகத்தில் மர்மமான முறையில் இரண்டு புலிகள் கடந்த  ஆண்டு இறந்தன அது பற்றிய தகவல்களை சேகரிக்க  செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. மேலும், பழங் குடி மக்களுக்கு வனத்துறை சார்பில் குடியிருப்புகள் கட்டித்  தரப்படுகிறது. அதனை நேரில் சென்று பார்ப்பதற்கும் பத் திரிகையாளர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. ஆனை மலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு நிகழ் விற்கு பத்திரிகையாளருக்கு அழைப்பு இல்லை. வன கோட்ட  அலுவலகத்தில் காணாமல் போன விலை உயர்ந்த யானை தந்தங்கள் பற்றிய தகவல்களை செய்தியாளர்களுக்கு தரப் படவில்லை. இதைப் போன்று தொடர்ந்து பத்திரிகை யாளர்களை வனத்துறை அலுவலர்கள் புறக்கணித்து வரு கின்றனர். ஊடகத்தினருக்கு தெரியாமல் தொடர்ந்து மறைக்கப்பார்க்கின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனைக்கேட்ட இணை இயக்குனர் பார் கவ் தேஜா, இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங் களில் நடைபெறாது முறையாக பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.