districts

img

பொள்ளாச்சியில் மாபெரும் தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்

பொள்ளாச்சி, செப்.19- கோவை மாவட்டம், பொள்ளாச்சி  அரசு மருத்துவமனையில் 2வது மாபெரும் தடுப்பூசி முகாமை ஞாயி றன்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத் தார்.  தமிழகம் முழுவதும் ஞாயிறன்று  2வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஞாயிறன்று கோவை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதன்பின் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் ஆக்சிஜன் உற்பத்தி அலகை துவக்கி வைத்தார். இதனைத்தொ டர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் மூலம், 15 லட்சத்திற்கும் மேல் இன்று தடுப்பூசி போடப்பட உள்ளது. கோவையில், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் களில் 29 லட்சத்து 27 ஆயிரம் பேரில்,  2 லட்சத்து 4 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 38 மாவட்டங்க ளில், முதல் தவணை மற்றும் 2 ஆம் தவணை தடுப்பூசி போடப்பட்ட மாவட் டங்களில் கோவை முதலிடத்தில் உள் ளது. ஆனால், தொற்று எண்ணிக் கையை பொறுத்த வரை 3 இலக் கத்தில் உள்ளது. மலைப்பகுதி மற் றும் கிராமப்புற பகுதிகளிலும், தமி ழக - கேரள மாநில எல்லைப்பகுதி ஆகிய முகாம்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.  முன்னதாக, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த குறும்படத்தை ப்ரொஜக்டரில் வெளி யிட்டார். இதன்பின், தமிழக - கேரள எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் வாகனங்கள் செல்வது தொடர்பாக பார்வையிட் டார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் சண்முகசுந்தரம், திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.வரத ராஜன், திமுக மாநில விவசாய அணி  துணைத்தலைவர் தமிழ்மணி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.