பொள்ளாச்சி, ஜூலை 18- பொள்ளாச்சி தோட்டக்கலைத்துறை சார் பில் பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடா ரங்கள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. என வடக்கு தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகி ருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் புதனன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத் தில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடா ரங்கள் தேவைப்படும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 2023- 24 ஆம் ஆண்டு முதல் பசுமைக்குடில் அமைக்க, 56 சதவீத மானியத்தில் 2000 சதுர மீட்டர் பரப் பளவில் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் வாயிலாக பசுமைக்குடில் அமைக்க, ரூ. 455 ஒரு சதுர மீட்டருக்கு என, ஒரு பயனாளிக்கு அதிகபட்சம், 4,000 சதுர மீட்டருக்கு வழங்கப்படும். பசுமைக்குடில் அமைக்க தோட்டக் கலைத்துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது. பசுமைக்குடில் அமைத்து உயர் தொழில்நுட்ப சாகுபடி செய்யும் போது, தட்பவெப்பநிலை காரணி களால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுத்து வருவாயை பெருக்கலாம். மேலும், நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாது காத்து அதிக மகசூல் கிடைக்கும். சொட்டு நீர் பாசனம் அமைத்து அதன் வாயிலாக நீர் மற்றும் உர மேலாண்மை செய்யும் போது குறைவான நீர் மற்றும் அதிகப்படியான மக சூல் கிடைக்கும். இதனால், அதிக லாபமும் பெறலாம். ஆகவே, ஆர்வம் உள்ள விவசா யிகள் இத்திட்டத்தில் தோட்டக்கலைத்துறை வாயிலாக பயன்பெற வடக்கு தோட்டக் கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் அடையலாம் என்றார்.