பொள்ளாச்சி, ஜூன் 4- நடைபெற்ற நாடாளு மன்ற பொது தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பா ளர் கே. ஈஸ்வரசாமி வெற்றி பெற்றார்.
உடுமலை சாலையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங் கம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொள்ளாச்சி நாடா ளுமன்றத் தொகுதியில் பதிவான மொத்த 1,124,743 வாக்குக ளில் 15 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அவற்றில், திமுக 382131, அதிமுக 208681, பாஜக 161923, நாம் தமிழர் 42952 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுகவை விட திமுக 1 லட்சத்து 73 ஆயி ரத்து 450 வாக்குகளை பெற்றிருந்தார். இந்நி லையில், ஐந்து லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை 2 ஆம் இடத்திற்கும், பாஜகவை 3 ஆம் இடத்திற்கு தள்ளி திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து வெற்றி பெற்ற கே.ஈஸ்வர சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமி ழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி னார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பொய் யான தகவல் பரப்பியவர்களின் சதி திட்டத் திற்கு செவி சாய்க்காமல் சரியான பதில டியை தேர்தல் வெற்றி மூலம் மக்கள் கொடுத்துள்ளார்கள். தேர்தல் பிரச்சா ரத்தின் போது பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு அளித்த வாக்குறு திகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் மேலும் மக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு உடனடியாக செயல்படுவேன் என்றார்.