districts

img

பழங்குடியின மக்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தருக

சிபிஎம் ஆனைமலை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்

பொள்ளாச்சி, செப்.26- ஆனைமலை மற்றும் வால்பாறை பகுதில் வசிக் கும் பழங்குடியின மக்க ளுக்கு புதிய தொகுப்பு வீடு கள் கட்டித்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனை மலை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றிய மாநாடு  தோழர் கே.தங்கவேல், கே.சி. கருணாகரன் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை மாவட் டக்குழு உறுப்பினர் ஏ.துரைசாமி ஏற்றி வைத்தார். இம்மாநாட் டிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், கே.தங்க வேல், சரிதா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பாலமூர்த்தி, கே.அஜய்குமார், கே. எஸ்.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தீர்மானம்- செயலாளர் தேர்வு இம்மாநாட்டில், தேயிலைத் தொழிலாளர்களுக்கு வீடுக ளும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு காலி வீட்டுமனை களும் வழங்கிட வேண்டும். ஆனைமலை வட்டாரம் முழு வதும் பயன்படும் வகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை அமைக்க வேண்டும். ஆனைமலை, ஆழியார் பகுதியி லுள்ள பழங்குடியின மாணவர்களுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும். மழை வெள்ளத்தால் வீடு களை இழந்த சர்கார்பதி, நாகரூத்து, டாப்சிலிப் பகுதி களில் வசிக்கும்  பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் அமைத்து தர வேண்டும். பொது கழிப்பிடம், மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒன்றியச் செயலாளராக வி.எஸ்.பரம சிவம் உட்பட 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.