பொள்ளாச்சி, செப்.12- பொள்ளாச்சியின் முக்கிய நீராதர மான பிஏபி பகிர்மான கிளை கால்வாய் கள் புதர்மண்டி செடி கொடிகள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பிஏபி என்கிற பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தின் கீழ், காண்டூர் கால் வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த போடிபாளை யம், வஞ்சியாபுரம் பகுதி வழியாக செல் லும் அதன் கிளை கால்வாய்கள் புதர் மண்டி, செடிகொடிகள் நிறைந்து குப்பை மேடுகளாக, சிதிலமடைந்து காணப்படு கிறது.
இதனால் விவசாய பயன்பாட்டிற் காக திறந்து விடப்படுகின்ற தண்ணீர் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆண்டிற்கு ஒருமுறை பொதுப்பணித்துறையினரால் கால்வாய் களை சீரமைக்கும் பணிகளை மேற் கொள்ளப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்வாய்கள் சீரமைக் கப்படாததால், அவைகள் சிதிலம டைந்து கேட்பாடற்று காணப்படுகிறது. எனவே, பொதுப்பணித்துறையினர் முழுவீச்சாக செயல்பட்டு கிளை கால் வாய்களை சரிவர பராமரிக்க வேண் டும். அதற்கென தனிக்குழு அமைத்து போர்கால அடிப்படையில் கிளை கால் வாய்கள் சீரமைக்க வேண்டும் என பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.