districts

முதியவர் அடித்துக்கொலை

பெரம்பூர்:டிச. 29 வியாசர்பாடி, புதிய மேகசின் சாலையை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது64). இவர் தனக்கு சொந்தமான கட்டித்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை வாடகைக்கு விட்டு உள்ளார்.  இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் மட்டும் தனியாக அதே கட்டி டத்தில் கீழ் தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன் ராஜா எம்.கே.பி நகரில் தனியாக குடும்பத்துடன் உள்ளார்.பன்னீர் செல்வத்துக்கு வீடு, கடை களின் வாடகை மூலம் அதிக அளவு பணம் வந்தது. புதன்கிழமை இரவு பன்னீர் செல்வத்தில் செல்போனுக்கு அவரது மகன் ராஜா பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இத னால் சந்தேகம் அடைந்த அவர் வியாழக் கிழமை அதிகாலை தந்தையை பார்ப்ப தற்காக வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது அங்குள்ள அறையில் தந்தை பன்னீர் செல்வம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தலை, முகத்தில் பலத்த காயம் காணப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் கொள்ளை போய் இருந்தன. இதுகுறித்து வியாசர்பாடிகாவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மர்மநபர்கள் பன்னீர் செல்வத்தை அடித்து கொலை செய்து விட்டு பணம்-செல்போனை எடுத்து சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளைபோன பன்னீர் செல்வத்தின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு உள்ளது. பன்னீர் செல்வத்துக்கு வாடகை பணம் அதிகம் வருவதை அறிந்து மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.