பெரம்பலூர், டிச.11 - மின்சாரத் துறையை தனியாருக்கு விடுவதை எதிர்த்து போராடி வரும் சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேச மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதர வாக, மக்களுக்கான சேவையை தொ டர்ந்திட வேண்டும். மின்சார வாரியங் களை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்கம் கூட்டுத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட் டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு திருச்சி மண்டல செய லாளர் அகஸ்டின், ஏ.இ.எஸ்.யு தொழிற் சங்கத்தின் திருச்சி மண்டலச் செயலா ளர் பெரியசாமி, பொறியாளர் கழகம் சார்பாக மேகலா, பரமேஸ்வரி, அருள் ஜோதி உட்பட அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திட்டச் செயலாளர் கலைச் செல்வன் உரையாற்றினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள, மின் வட்ட அலுவலகம் முன்பு சிஐடியு தலைவர் டி.கோவிந்தராஜ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மின்வாரிய தொழிலாளர் சம்மே ளனத்தின் மாநில துணைத் தலைவர் பொன்.தங்கவேல், பொறியாளர் சங்க செயலாளர் பி.சுந்தர், எம்ப்ளாயிஸ் சங்க தலைவர் டி.மோகன்தாஸ், செயலாளர் எம்.மோகன்தாஸ், சிஐடியு வட்டச் செய லாளர் பி.காணிக்கைராஜ், ஐக்கிய சங்க பொருளாளர் பாரவேல், அண்ணா தொழிற் சங்க இணைச்செயலாளர் டி.ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.