பெரம்பலூர், டிச.24 - பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வா யன்று ‘ஜிங்கிள் மற்றும் மிங்கிள் 2024’ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார்.
இயேசு பிறப்பு குடில், 200 மாணவி கள் தேவதைகளாகவும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தனர். மாணவிகளின் கை வண்ணத்தில் மிக நுணுக்கமாக உரு வாக்கப்பட்ட பனி மாளிகை, பனிக்குடில், பனிபந்து ஆகியவை அழகாக வடிவமைக் கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து 150 கேக்குகள் வெட்டி, வானத்தை நோக்கி வண்ணப் பலூன்கள் பறக்க விடப்பட்டன.
தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவி கள் அனைவரும் வெள்ளை மற்றும் ஊதா நிற உடையில் வந்து, சமத்துவத்தை வெளிப் படுத்தினர். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், தன லட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி பொங்கியா, பல்கலைக்கழக புல முதன்மை யர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.