districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குக! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 9 - தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் குறைந்த பட்ச பென்சன் ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கி மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திங்களன்று மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் டி. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பால்சாமி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். 

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ யில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கே.செல்லத்துரை தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றி யச் செயலாளர் வாசுகி, மாவட்ட பொருளா ளர் கே.செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மாரி,  தெட்சிணாமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் உரையாற்றினர். 40 ஆண்டு அரசுப் பணி செய்த சத்துணவு  - அங்கன்வாடி ஊழியருக்கு பென்சன் வெறும்  ரூ.2 ஆயிரம் என்பது நியாயம் தானா? கிராமப்புற கோயில் பூசாரிக்கு ரூ.4 ஆயிரமா? மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியம்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.