பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.11,445 வீதம், ரூ.57,225 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.