பெரம்பலூர், டிச.5- விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், நிவாரண பொருட்களை புதன்கிழமை அனுப்பி வைத்தார்.'
பெரம்பலூர் துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான 19 அத்தியாவசி யப் பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.