பெரம்பலூர், டிச.7 - 200 ஏக்கர் பயிர்கள் சேத மடைந்த நிலையில், அவற் றுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகே உள்ள பெரியசாமி கோவில் என்ற பகுதியில், பச்சை மலை யில் இருந்து வரக்கூடிய நீர் செல்வதற்கு சரியான முறையில் வடிகால் வசதி இல்லை. இதனால், இப்பகு தியில் ஆண்டுதோறும் பயி ரிடப்படும் அனைத்து பயிர் களும் சேதமடைந்து விவ சாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என் கின்றனர் விவசாயிகள்
இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பச்சை மலையிலிருந்து வரக்கூடிய மழைநீர் சரியாக செல்ல வழிகள் இல்லாத தால், இப்பகுதியில் முத்து சோளம் பயிரிட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து, சுமார் 200 ஏக்கருக்கும் மேற் பட்ட பயிர்கள் வீணாகின. இதனால் முத்து சோளம் பயிரிட்ட அனைத்து விவ சாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வா கம் தகுந்த நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் மழை நீர் செல்வதற்கு சரியான முறையில் வடிகால் அமைத்தும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லத்துரை, மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து விவசாயி களுக்கு ஆதரவாக இது குறித்து மாவட்ட நிர்வாகத் திடமும் தமிழக அரசிடமும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்த னர்.