districts

img

சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக பி.ரமேஷ் தேர்வு

பெரம்பலூர்,டிச.4- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக பி. ரமேஷ் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட ஒன்பதாவது மாநாடு பெரம்பலூரில் டிசம்பர்  3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, ஏ.கே ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். வர வேற்புக்குழு தலைவர் என்.செல்லத்துரை வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமு வேல்ராஜ் துவக்க உரை யாற்றினார்.

மாவட்ட செய லாளர் பி. ரமேஷ்  வேலை யறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.அகஸ்டின் வரவு -  செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.  மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.நம்புராஜன் வாழ்த்துரை வழங்கி னார். மாநிலக்குழு உறுப்பி னர் சாமி. நடராஜன் நிறை வுரையாற்றினார். வர வேற்புக்குழு செயலாளர் இன்பராஜ் நன்றி கூறினார். 

புதிய மாவட்டக்குழு தேர்வு

மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக பி.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் களாக என்.செல்லத்துரை, எஸ். அகஸ்டின், ஏ.கலை யரசி, ஏ.ரங்கநாதன், ஏ.கே. ராஜேந்திரன்,  டாக்டர் .சி. கருணாகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்

பெரம்பலூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில் வழித் தடத்தை நிறைவேற்ற வேண்டும்.  முதல்வர் அறிவித்தபடி பெரம்பலூர் காவிரி குடிநீர் திட்டத்துக்கு ரூ.366 கோடி நிதியை உடனே வழங்க வேண்டும். விவ சாய மாவட்டமான பெரம் பலூரில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.