பெரம்பலூர், டிச.11 - குழந்தை திருமணம், குடும்ப வன்முறை என பாலின பாகுபாடு காரணமாக நிகழ்த்தப் படும் பாதிப்புகள் குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் புதனன்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சுமார் 300 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு இயக்க பேரணியை சார் ஆட்சியர் சு.கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை யில் தொடங்கி, கிருஷ்ணா திரையரங்கம் வழியாக ரோவர் வளைவு வரை சென்று முடி வுற்றது. இப்பேரணியில் பல்வேறு விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கையில் ஏந்தியவாறு நடந்து சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் அ.அமுதா, உதவி திட்ட அலுவலர்கள் பெர்லினா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.