திண்டுக்கல், ஏப்.1- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்கள வைத்தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து பழனி மதினா நகரில் ஞாயிறன்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேக ரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜக - அதிமுக இரண்டும் ஒன்று தான் அதிமுகவை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். 10 ஆண்டு களாக கூட்டணியில் இருந்து விட்டு நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று இப்போது அதிமுக சொன்னால், அந்த கட்சி பாஜகவோடு சேர்ந்து கொண்டு செய்த தவறுகள் எல்லாம் இல்லை என்று ஆகிவிடாது. அதிமுக ‘பாவ மன்னிப்பு’ கேட்டாலும் மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம் வெற்றி பெற்றால் தான் அது மக்களுக்கான கூட்டணி வெற்றி பெற்றது போலாகும்.
குடியுரிமை சட்டத்திற்கு வாக்களித்த அதிமுக
மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. அதிமுகவின் 11 ஓட்டு, பாமகவின் ஒரு ஓட்டு, எதிர்த்து விழுந்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் போயிருக்கும். இன்றைக்கு நாம் அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தவறுகளையெல்லாம் சுலபமாக மறந்துவிட முடியுமா? அதி முக குடியுரிமை சட்டத்தில் ஆதரித்து வாக்களித்தது எவ்வளவு பெரிய துரோ கம். இந்த துரோகத்தை மறக்கவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
35 மருந்து கம்பெனிகளிடம் நன்கொடை வாங்கிய பாஜக
ஒன்றிய பாஜக அரசு நடத்திய தேர்தல் பத்திர ஊழல் உலகிலேயே பெரிய ஊழல். 35 மருந்து கம்பெனிகள் சேர்ந்து ஆயிரம் கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பாஜகவிற்கு தேர்தல் பத்திரமாக வழங்கியிருக்கிறார்கள். இந்த 35 மருந்து கம்பெனிகளில் 7 கம்பெனிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. தரம் குறைந்த மருந்துகளை உற்பத்தி செய்தார்கள், விற்பனை செய் தார்கள் என்பதற்காக இந்த விசார ணை நடைபெற்று வருகிறது. மக்கள் உயிருக்கு என்ன ஆபத்து வந்தா லும் பரவாயில்லை என்று மருந்துக் கம்பெனிகளிடம் தேர்தல் நன்கொடை யாக பாஜக வாங்கியிருக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட மோசடி!
இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த பணம் தான் பல்வேறு மாநி லங்களில் ஜனநாயகப் படுகொலை களை நடத்துவதற்கு அவர்களுக்கு பயன்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு விதிகளை வளைத்து பலன் கொடுத்தார்கள், ஆதாயம் செய்து கொடுத்தார்கள் என்பதல்ல. இந்த பணத்தை வைத்து தான் நாடு முழுக்க பாஜக தனது கட்சியை வளர்த்தது. எதிர்கட்சி ஆளுகிற அரசுகளை பிளவு படுத்தி கவிழ்த்தார்கள். ஒரு எதிர்க்கட்சி எம்எல்ஏவை 100 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். இது போன்ற மோசடிகளை செய்ய தேர்தல் பத்திர ஊழல் பயன்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த ஜனநாயகத்தை மீட்க நாம் நினைக்கிறோமோ அந்த ஜனநாயகத்தை முழுமையாக படு கொலை செய்தது பாஜக. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி
னர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, முன்னாள் நகர் மன்றத் தலைவர் வி.இராஜமாணிக்கம், நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி, நகர்மன்ற துணைத் தலைவர் கே.கந்த
சாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமசாமி, எஸ்.கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ், மாரிக்
கண்ணு, செந்தில்குமார் மற்றும் நர்மதா, நகர் மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், இந்திரா, திருநாவுக்கரசு, பாஸ்கரன், காளீஸ்வரி. சக்திவேல், கலையரசி, விமலபாண்டியன், முருக
பாண்டியன், தீன தயாளன், தமிழ்மணி, காங்கிரஸ் முத்து விஜயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் சிவா ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.