பழனி, ஏப்.8- திமுக தலைமை யிலான இந்தியா கூட்டணி யின் திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதா னந்தத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பழனி யில் ஞாயிறன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் பேசு கையில், ‘‘பாஜக கூட்டணி யை விட்டு வெளியேறி விட்டோம் எனக் கூறும் எடப் பாடி பழனிச்சாமி என்றாவது மோடியையோ பாஜகவை யோ விமர்சித்து பேசியுள் ளாரா’’ என கேள்வி எழுப்பி னார்.
மேலும், ‘‘இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடி யுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்த போது அதற்கு எதிராக பேசி யதோடு, எதிராக வாக்க ளித்த கட்சிகள் நாங்கள். தற் போது ஒன்றாக ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் ஒரே மேடையில் அமர்ந்தி ருக்கிறோம். அதிமுக இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்யும் வகை யில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தது. தற்போது பாஜக கூட்டணி யில் உள்ள பாமகவும் வாக்க ளித்தது. இப்போது எந்த முகத்தோடு திண்டுக்கல் தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறீர்கள்? தமிழ்நாடு சட்டமன்றத் தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாங் கள் சட்டமியற்றி உள் ளோம்.
நானே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட் டுள்ளேன். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும் கையெ ழுத்திட்டுள்ளது. இஸ்லாமிய மக்களை உறுதியாக நின்று பாதுகாப்போம்” என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தில் திமுக நகரச் செயலாளர் ஆ.வேலுமணி, நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய பெருந் தலைவர் ஈஸ்வரி கருப்பு சாமி, கிழக்கு ஒன்றியச் செய லாளர் சுவாமி நாதன், மேற்கு ஒன்றியச் செயலா ளர் சௌத்திரபாண்டியன், அஸ்வின், பிரபாகர், லோக நாதன், வெ.தமிழ்மணி, அபுதாகீர், சோ.காளிமுத்து, வி.ஏ.சின்னதுரை, ஆ.மேன கா, நாகேஸ்வரி, ராஜ ராஜேஷ்வரி, கருப்பதாள், காங்கிரஸ் முத்துவிஜயன், மக்கள் நீதி மய்யம் சிவா ஹாசன், விசிக திருவள வன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலச் செயற் குழு உறுப்பினர் க.கனக ராஜ், நகரச்செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவ ருமான கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் வ.ராஜமாணிக் கம், கமலக்கண்ணன், ராமசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் திர ளாக பங்கேற்றனர்.