பழனி, ஆக.3- பழனியில் நடைபெறவுள்ள அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு சனிக்கிழமை தெரி வித்தார்.
பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லுாரி வளாகத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான பந்தல் அமைக்கும் பணி களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையா ளர் ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யர் மொ.நா.பூங்கொடி, ஆகியோர் சனிக் கிழமை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 தேதி களில் நடைபெறுகிறது. மாநாட்டை யொட்டி ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்பு புகைப் படக் கண்காட்சி. வேல் அரங்கம், முப்பரி மாண தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம். கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இம் மாநாட்டில் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து முருக பக்தர்கள் ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப் பிக்க உள்ளனர்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஐந்து ஆய்வரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 1,300 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இவர்களில் வெளி நாட்டினர் 39 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், நான்கு நீதிபதிகள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொ ழிவாளர்கள் கலந்துகொள்ளவுள்ள னர்.
மாநாட்டிற்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும் என்பதால் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி கள், சுகாதாரப் பணிகள், மருத்துவ வசதிகள், தங்குவதற்கான வசதிகள், உணவு வசதிகள், பக்தர்களுக்கு வழி காட்ட தன்னார்வலர்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றார்.
இந் நிகழ்வில் திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.