பழனி, ஆக.21 ஈரோடு – பழனி அகல ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்த பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதனன்று ரயில் நிலை யம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.ராஜமாணிக்கம், எம். ராமசாமி, எஸ்.கமலக் கண்ணன், நகரச்செயலாளர் கே.கந்தசாமி, ஒன்றியச் செயலளார் பி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.சச்சி தானந்தம் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘பழனி - ஈரோடு அகல ரயில் பாதைக் கான திட்டத்தை விரைந்து அமலாக்குவதற்கு பதிலாக அதை இழுத்தடிக்கிற பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இத்திட்டம் பழ னிக்கு வரும் பக்தர்களை இணைக்கும் திட்டமாக உள்ளது. வடமாநிலங் களையும் இணைக்கும் திட்ட மாகும். ஈரோட்டிலிருந்து பழ னிக்கான ரயில் சேவை துவக்கப்பட்டால் பல்வேறு வடமாநில பக்தர்கள் இங்கு வர முடியும். ஈரோடு உள்ளி ட்ட மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் செல்ல பழனி வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய முக்கியமான திட்டத்தை நீண்டகாலமாக கிடப்பில் போட்டுள்ளது பாஜக அரசு. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட இந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி என்றும் அறிவிக்கவில்லை. இந்த திட்டம் நடப்பில் இருக் கிறது என்பதை காண்பிப்ப தற்காக வெறும் ரூ.1000 ஒதுக் கீடு செய்துள்ளது. இது கடுமையான கண்டனத்திற் குரியது.
இது பழனி மக்களுடைய கோரிக்கை, பழனி முருகன் கோவிலுக்கும் வரும் பக்தர் களின் கோரிக்கை ஆகும். எனவே ஒன்றிய பாஜக அரசு இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் இது போன்ற 6 திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு இருக் கிறது. அந்த திட்டங்களை யும் நிறைவேற்ற வேண்டும். பழனி ரயில் நிலையத்தை மேம்படுத்துகிற பணி நடந்தி ருந்தாலும் கூட கூடுதல் டிக்கட் கவுண்டர்கள் போட வேண்டும். மேம்பாலப்பணி களை விரைந்து நடத்திட வேண்டும். பழனியிலிருந்து வேளாங்கன்னிக்கு சிறப்பு ரயில் இயக்கவேண்டும். அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில் விட வேண்டும்’ என்று ஆர்.சச்சிதானந்தம் கூறினார்.