பழனி, ஏப்.7- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம் பழனி நகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பழனி நகர மக்கள் மேளதாளம் முழங்க ஆரவாரத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காலை பழனி நகரில் பாத விநாயகர் கோவிலிலிருந்து தனது வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை ஆர்.சச்சிதானந்தம் துவக்கி னார்.
பின்னர் மதனபுரம், குளத்துரோடு, பட்டத்து விநாயகர் கோவில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை, தேரடி, சாமி தியேட்டர், விநாயகர் கோவில், புது தாராபுரம் ரோடு, குபேர பட்டிணம், சத்யாநகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பிரச்சாரத்தில் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் பேசுகையில், ‘‘பழனி, கொடைக்கானல் இரண்டும் சுற்றுலாத் தலங்கள். பழனிக்கு வருபவர்கள் கொடைக்கானலுக்கும், கொடைக்கான லுக்கு வருபவர்கள் பழனிக்கும் வந்து செல்வது வழக்கம்.
இரண்டு நகரங்களும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த பகுதி யாகும். கொடைக்கானலுக்கு செல்வதற்கு கடினமான மலைப்பாதையில் செல்ல வேண்டும். இதற்கு பதிலாக பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகும். திமுக அரசும் இந்த திட்டத்தை நிறைவேற்று வதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. திமுக அரசின் முக்கியமான திட்டங்களுள் ஒரு திட்டமாக இது உள்ளது. இந்நிலையில் நான் வெற்றி பெறும்பட்சத்தில் இந்த திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
மேலும் பழனி மலைக்கு கேரளாவிலி ருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகம். ஐயப்ப பக்தர்கள் பழனிக்கு வந்துவிட்டு சபரிமலைக்கு பேருந்தில் செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு ஐயப்ப பக்தர்களின் இருமுடிப் பயணம் எளிமையாக, சிறப்பாக அமைந்திட பழனியிலிருந்து சபரிமலைக்கு ரயில் சேவை வேண்டும் என்ற பழனி நகர மக்கள் மற்றும் கேரள மக்களின், ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நான் தீவிர நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார். ஒவ்வொரு பகுதியிலும் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், அருந்ததியர் அமைப்புகள் என இந்தியா கூட்டணி கட்சியினர் மாலை கள் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். கும்ப மரியாதை வரவேற்பு அளித்தும், பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
திமுக நகரச் செயலாளர் வேலு மணி, ஒன்றியச் செயலாளர்கள் சுவாமி நாதன், சௌந்திரபாண்டியன், அஸ்வின் பிரபாகரன், லோகநாதன், நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலை வர் கே.கந்தசாமி, கவுன்சிலர்கள் இந்திரா திருநாவுக்கரசு, சுரேஷ், செபாஸ்டின், காளீஸ்வரி பாஸ்கரன், தீனதயாளன், விமலபாண்டியன், சுரேஷ், முருகபாண்டி யன், நெய்க்காரபட்டி பேரூராட்சித் தலைவர் கருப்பாத்தாள், துணைத்தலைவர் சகுந்தலா, சிபிஎம் சார்பாக மாநி லக்குழு உறுப்பினர் பத்ரி, ராதிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.ராஜ மாணிக்கம், எம்.ராமசாமி, எஸ்.கமலக் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.