districts

img

மழை வெள்ளத்தின் போது வராதவர், தேர்தலுக்கு மட்டும் வருகிறார்...

உதகை, ஏப்.15- பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்து வதற்கான 7-ஆம் கட்ட பரப்புரை என்ற பெயரில், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், மலைகளின் ராணி யான உதக மண்டலத்தில், ஞாயி றன்று தனது பரப்புரையை துவங்கி னார். ‘இந்தியா’ கூட்டணி சார்பில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்  னத்தில் வாக்கு சேகரித்து, உதகை யில் அவர் பரப்புரை மேற்கொண்  டார். அப்போது அவர் பேசியதா வது:-

அண்ணன் ஆ.ராசாவுக்கு வாக்கு கேட்க வந்திருப்பது மிகப்பெரிய பெருமை என்றால். பெரியாரின் கொள்கை வடிவம், பேரறிஞர்  அண்ணாவின் அறிவு வடிவம், கலைஞரின் சுயமரியாதை வடிவம், நம் தலைவரின் அன்புத் தம்பி, அவர்  தான் நம் வேட்பாளர் என்றார்.

இளை ஞர் அணியின் வழிகாட்டியாக நான்  ஆ.ராசாவை கேட்டு வாங்கினேன். 2ஜி பொய் வழக்கின்போது, தலைவர் கலைஞர் என் தம்பி பக்கம் நான் நிற்பேன். என் தம்பியை கூட  இருந்து நான் காப்பாற்றுவேன் என கூறினார். ஒற்றையாளாக நின்று உச்ச நீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்று அதிலிருந்த அனைத்து பிரச்சனைகளையும் சூழ்ச்சிகளையும் வீழ்த்தியவர் ஆ. ராசா. அவர் இந்த முறை, குறைந்  தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு  வரை சிலிண்டர் விலை குறைவா கவே இருந்தது. ஆனால் 2014-ஆம்  ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த  பிறகு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.  800 உயர்ந்துள்ளது. தற்போது தேர்  தல் வந்து விட்டதால் ரூ.100  குறைத்து விட்டு நாடகமாடுகிறார் கள். டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கியாஸ் சிலிண்டர் ரூ. 500க்கு தரப்படும். பெட்ரோல் 65  ரூபாய்க்கு தரப்படும் என முதல மைச்சர் வாக்குறுதி கொடுத்துள் ளார்.

அவர் சொன்னதை செய்து காட்டுபவர். ஆனால், தமிழகத்திற்கு இது வரை பிரதமர் மோடி ஏதாவது கொடுத்துள்ளாரா? சென்னை, நெல்லை, தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க  வந்தரா? வரவில்லை. பேரிடர்  பாதிப்புக்கு நிதியும் கொடுக்க வில்லை. ஆனால் தற்போது தேர்  தல் வந்தவுடன் அடிக்கடி தமிழகத்  திற்கு வருகிறார். தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை கடந்த அதிமுக ஆட்சி யில் அடகு வைக்கப்பட்டது. அதை  மீட்டெடுக்க திமுக போராடி வரு கிறது.

அதற்காக தான் இந்த தேர்  தல். இப்போது பாஜக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வரப்போவதாக கூறுகிறார்கள். அது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை தமி ழகத்திற்கு நீட் தேர்வு வரவில்லை.  அவர் மறைவுக்கு பிந்தைய அதி முக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமி ழகத்திற்கு வந்தது. நீட் தேர்வு கார ணமாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 22 பேர் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு மூலம் தமிழக கல்வி உரிமையையும் மோடி பறித்து விட்டார்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு கிலோ வுக்கு ரூ. 35 ஆக விலை நிர்ண யிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங் கள், சுற்றுலா தல வழித்தடங்கள், இந்தியா சுற்றுலா வளர்ச்சி கழ கம் மூலம் மேம்படுத்தப்படும். மேட்டுப்பாளையம், சத்தியமங்க லம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு  ஆகிய வழித்தடங்களில் உள்ளடக்  கிய அகல ரயில் பாதைத் திட்டம்  நிறைவேற்றப் படும். நீலகிரியில் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைந்து தொடங்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்  தும் நிறைவேற நீங்கள் உதயசூரி யன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.