நீலகிரி மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் முதல் தவணையாக 171 சந்தாக்களுக்கான தொகை 2 லட்சத்து 64 ஆயிரத்து 650 ரூபாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் வழங்கப்பட்டது. கூடலூரில் ஞாயிறன்று நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், விநியோக மேலாளர் நெல்சன் பாபு, கட்சியின் மூத்த தலைவர் என்.வாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், ராஜன், சுரேஷ், வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.