தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வதனைத்திலும் ஒன்றாய்
அன்பென்று கொட்டு முரசே – அதில்
ஆக்கமுண்டாமென்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் – வெறுஞ்
சூதுப்பிரவுகள் போனால்
அன்பென்று கொட்டு முரசே – மக்கள் அத்தனைப் பேரும் நிகராம்
என்கிற மகாகவி பாரதியின் வைரவரிகளுக்கு உயிர் கொடுத்தாதைப்போல வயநாடு பேரிடரின் துயரத்தில் சிக்கி யுள்ள மக்களை மீட்கும் அர்ப்பணிப்பு மிக்க பணிகளில் ஆயிரமாயிரம் அன்புக்கரங்கள் நீண்டு கொண்டே இருக் கிறது.
கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் உல கையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவரை 400க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் தேடு தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் உறவிழந்து, சொந்த வீடு, நிலம் என அணைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலையில் அனாதைகளாக நிற்கின்றனர். ஆறு தல் சொல்ல வார்த்தைகளின் கடவுளின் தேசமே விக்கித்து நிற்கிறது. அன்பினால் அணைத்தையும் எதிர்கொள்வோம் என கேரளம் மாநிலத்தை ஆளும் இடதுமுன்னணி அரசு களத்தில் பம்பரமாய் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறது. ஒன் றிய மோடி அரசைத்தவிர, இதர அனைவரும் வயநாட்டின் பேரிடர் பெருந்துயரில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்க போராடி வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி ஷினோஜ் வயநாடு முகாமில் தங்கியிருந்த மக்களின் அன்பைப்பெற்று இருக் கிறார். நீலகிரி மாவட்டம் அம்பலமூல கிராமத்தில் வசித்து வருபவர். வாலிபர் சங்க அம்பலமூலா வில்லேஜ் கமிட்டியின் செயலாளர். “லயன்ஸ் பாபு கேட்டரிங்கி”இல் பணியாற்றி வாழ்க்கையை நகர்த்துவதற்கான வருவாயை ஈட்டி வருபவர். வயநாடு பேரிடர் நிகழ்ந்த துயரத்தை கேள்விப்பட்டவுடன், தனது நண்பர்களை திரட்டிக்கொண்டு சூரல்மலை, முண் டக்கை உள்ளிட்ட பேரிடர் நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டார். பின்னர், மேப்பாடி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த முகாமிற்கு சென்ற ஷினோஜ், 10 நாட்கள் அங்கேயே தங்கி மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். இவரின் அர்ப்பணிப்பு மிக்க பணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்டக்குழு பாராட்டி கௌரவித்துள்ளது.