districts

அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு

உதகை, டிச.13 - லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித் துள்ளனர். இதுதொடர்பாக கூடலூர் லாரி உரிமை யாளர் சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு அரசு அனுமதித்த அளவை விட அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை தடை செய்ய வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட கட்டுமான பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தமிழக குவாரி களிலிருந்து  எம்சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண் டும்.

கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை நம்பியுள்ள லாரி ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கான குடும்பங்களை பாதுகாக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி டிச.16ஆம் தேதியன்று கூடலூரில்  லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.குமாரசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.