districts

img

மாறிவரும் காலநிலையும் உற்பத்தி குறையும் தேயிலையும்

எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீலகிரியில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மிகச்சிறிய மற்றும் சிறிய தேயிலை தோட்டங்கள் வைத்திருப் போர், கடும் உற்பத்தி இழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தூக்கமிழந்து தவிக்கின்றனர்.

40 சதவீதம் குறையும்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  உள்ள  குந்தாவில் ஏழு ஏக்கர் தேயிலைத் தோட்டம் வைத்திருப்பவரும் நெலிக்கொலு நுண் மற்றும் சிறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தின் தலைவருமான எஸ்.ராமன் இந்தாண்டு உற்பத்தி 40 சதவீதம் குறையும் என்கிறார்.

இதற்கான காரணங்களைக் குறிப்பிட்ட அவர் கடந்த டிசம்பரில் நிலவிய உறைபனி யால்  தேயிலை இலைகள் மோசமாகப் பாதிக்கப் பட்டன. குறிப்பாக 72 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக வெப்பம் நீலகிரி பகுதியில் நிலவிய தாலும் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வழக்கமாக கோடை மழை பெய்யும். ஆனால், அதுவும் இந்தாண்டு இதுவரை பெய்யவில்லை. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்கும் நீலகிரியில் ஒருவித வறட்சி சூழல் நிலவுகிறது என்றார்.

 தேயிலை விவசாயிகள் ஒரு கிலோ ரூ.16-க்கு இலைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். இது மிக மிகக் குறை வான தொகை. தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு ஒரு கிலோவுக்கு ரூ.30 வழங்கவேண்டும்.  இந்தாண்டு உற்பத்தி கணிசமாக வீழ்ச்சியடை யும். இது விவசாயிகளை மிக மோசமாகப் பாதிக்கும் என்பது உறுதி.  இது தொடர்பாக நாங்கள் பலமுறை ஒன்றிய அரசை வலி யுறுத்தியும் எங்கள் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கவில்லை என்றார்.

மானியத்தில் பேட்டரி  அறுவடை எந்திரம்

தமிழகம் முழுவதும் மொத்தம் 46,610 பதிவு செய்யப்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், 19,000 பதிவு செய்யப்படாத தேயிலை விவசாயி கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏக்கருக்கு 5,000 முதல் 6,000 கிலோ வரை பச்சை தேயிலையை அறுவடை செய்து தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர் கூட்டு றவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு (Indcoserve) போன்ற அரசு நிறுவனங்களுக்கும் தேயிலையை  தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்புகிறார்கள்.

தமிழகத்தில் வால்பாறை உள்ளிட்ட சில பகுதிகளில்  தேயிலைத் தோட்டங்கள் இருந்தா லும், நீலகிரி தான்  தேயிலை உற்பத்தியின் கேந்திரமான பகுதியாகும்.

ஓக் மரநிழலை இழந்த தேயிலைச்செடிகள்
தேயிலைத் தோட்டங்களுக்குள் வளர்க்கப்பட்ட ஏராளமான சில்வர் ஓக் மரங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக  விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி,  திரு மணம் போன்ற செலவுகளை சமாளிப்பதற்கு உதவி வந்தன என்றார்.

கோத்தகிரியில் ஆறு ஏக்கர் தோட்டம் வைத்திருக்கும் ஐ.போஜன்  கூறுகையில், சில்வர் ஓக் மரங்கள் தேவைக்காக வெட்டப் படுவதால் இந்த மரத்தின் நிழலை தேயிலைத் தோட்டங்கள் இழந்துவிட்டன. இதனால் தேயிலை இலைகள் கடும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கருகுகின்றன. 

 கோடை வெப்பத்தின் பின்னணியில் நீலகிரி  முழுவதும் 70 சதவீதத்திற்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்களில்  சிவப்பு சிலந்திப் பூச்சி களின்  தாக்குதல் உள்ளது. வசதி படைத்த வர்கள் பூச்சி மருந்துகளை வாங்கி தெளிப்பார்கள் என்றார். 

பாதிப்பை ஆய்வு செய்ய குழு அமைத்திடுக!
 மஞ்சை வி.மோகன் என்பவர் கூறுகையில்,  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக தேயிலை இலை சாகுபடியையும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் தேயிலைத் தோட்டங்களையும் நம்பியுள்ளனர்.  தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நீலகிரியை பேரிடர் பாதித்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவிப்பதோடு, தோட்டங்களை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க வேண்டும். டெல்டா விவசாயிகள் போன்று சிறு தேயிலை விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்,’’ என்றார்.

குளோபல் டீ ஏலக்காரர்கள் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் குப்தா,  உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவை ஒப்புக்கொ ண்டார். அதே நேரத்தில் தேயிலை இலைகளின் தரம் பாதிக்கப்படுவது குறித்தும் கவலை தெரி வித்தார்.

1 லட்சம் கிலோ குறையும்
வழக்கமாக, குன்னூர் மற்றும் அதைச் சுற்றி யுள்ள 170 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான தேயிலை களை வாரந்தோறும் ஏலம் விடுகிறோம். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் 10 லட்சம் கிலோ தேயிலை கிடைத்தது, ஆனால் அது இனி ஒன்பது லட்சம் கிலோவாக குறைய வாய்ப்புள்ளது. இதே  வெப்பம் நீடித்தால்  நிலைமை மேலும் மோச மாகும்  என்றார். தேயிலை வாரியத்தின் (தென்னி ந்திய மண்டல அலுவலகம்) நிர்வாக இயக்குநர் எம்.முத்துக்குமார், கூறுகையில், நீலகிரியில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் தோட்டங் களின் தேயிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அவர்கள் அளிக்கும் புகாரின் மீது நாங்கள் உட னடியாக நடவடிக்கை எடுப்போம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேயிலை உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதா என்பதையும் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்றார்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்