districts

img

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை

உதகை, ஜூலை 18-
நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்
கும் தொடர் கனமழையால் 20க்கும் மேற்பட்ட
இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்துபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும்,ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் நீலகிரி மலைரயில் ரத்து செய்யப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து  வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் நான்கா வது நாளாக வியாழனன்றும் நீலகிரி மாவட் டம் முழுவதும் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டு வருகிறது. அதனை உடனுக்குடன் தீய ணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சா லைத்துறையினர் வெட்டி அகற்றி வருகின்ற னர். இந்நிலையில், அவலாஞ்சி செல்லும்  நெடுஞ்சாலையில் உள்ள முள்ளிக்கொரை அருகே ஒரே இடத்தில் திடீரென 5 மரங்கள் வேரோடு சாலையில் விழுந்தன. மரங்கள் விழுந்த போது அவ்வழியாக வந்த ஒரு பொலீரோ வாகனமும் மரங்களுக்கு இடையே சிக்கியது. ஆனால், அவ்வாகனத் தில் பயணம் செய்த ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பரும் நூலிழையில் உயிர் தப்பி னர்.  5 மரங்களும் ஒரே இடத்தில் சாய்ந்ததால் அவலாஞ்சி, எமரால்ட், இத்தலாறு, நஞ்சநாடு உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கபட்டது. 

இதுகுறித்த தகவலின் பெரில் நீலகிரி மாவட்ட தீயணைப்பு உதவி அதிகாரி அரி  பரந்தாமன் தலைமையில் நிலையை அதி காரி ஸ்ரீதர், அன்பகன் தலைமையிலான குழு வினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதேபோல் கூடலூர் சாலையில் தலைகுந்தா,  ஹால்ப்லிங்ஸ் ரோடு, கீழ்நாடுகாணி உள்பட நீலகிரி மாவட் டம் முழுவதும் 20 இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தது தீயணைப்புத் துறையி னர், வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலைத் துறை, வனத்துறையினர் ஆகியோர் இணைந்து மரங்களை வெட்டி அகற்றினர். நீலகிரியில்  மழையுடன் காற்றும் பலமாக வீசியதால்  உதகை லவ்டேல் பகுதியில் தண்டவாளத் தில் ராட்சத மரம் வேருடன் விழுந்தது. இத னால், உதகை, குன்னூர் மலைரயில் சேவை  ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத் தில் இருந்து வந்த ரயில் பயணிகள் குன்னூ ரில் இறக்கப்பட்டு பேருந்து மூலம் உத கைக்கு அனுப்பப்பட்டனர். இதேபோல், புத னன்று பெய்த மழைக்கு மாவட்டத்தில் 9 வீடு கள் சேதம் அடைந்தன.

7 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இத்த லார் பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு  ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அந்தப் பகுதியில் இருந்து சுமார் 20  குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட் டனர். இதேபோல் வியாழனன்று நீலகிரி மாவட்டத்தில் திகபட்சமாக அவலாஞ்சி பகுதி யில் 20 சென்டிமீட்டர் மழை பதிவானது. இத னால் அவலாஞ்சி பகுதிகளில் நீரோடைக ளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள் ளது‌. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை யால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள் ளன.A