districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

நாமக்கல், டிச. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பள்ளிபாளையம் நக ராட்சி நிர்வாகம், தனியார் அமைப் புடன் இணைந்து தெரு நாய்களை  பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி னர்.  நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பல் வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரி கிறது. இந்த நாய்கள் பள்ளி செல்லும்  மாணவ, மாணவியர் பொதுமக்கள்  என பல்வேறு தரப்பினரை அச் சுறுத்தி வருகிறது.

கடந்த வாரத்தில்  எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட  30-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்  ஒன்று கடித்து காயப்படுத்தியது. காயம் அடைந்தவர்களுக்கு பள்ளி பாளையம் அரசு மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை வழங் கப்பட்டது.  இதனையடுத்து தெரு  நாய்கள் எண்ணிக்கையை முற்றிலு மாக கட்டுப்படுத்த வேண்டும் என  பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக் கைகள் எழுந்து வருகிறது.

பள்ளி பாளையம் நகர்மன்ற கூட்டத்திலும் இது எதிரொலித்தது. தெரு நாய்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பள்ளிபாளையம் நான்கு  ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட் டம் வியாழனன்று நடைபெறும்  என அறிவிக்கப்பட்டது. இதனைய டுத்து, நிலைமையின் தீவிரத்தை  உணர்ந்த பள்ளிபாளையம் நக ராட்சி நிர்வாகம், உடனடியாக திருச் செங்கோட்டிலிருந்து நகராட்சி நாய்  பிடிக்கும் வண்டி வரவழைக்கப் பட்டு, சென்னையை சேர்ந்த தனி யார் அமைப்புடன் இணைந்து, தெரு நாய்கள் பிடிக்கும் பணிகளை  தீவிரப்படுத்தினர்.

 நகராட்சி பகுதியில் 1200க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரி யும் நிலையில், தற்போது பிடித்துச் செல்லப்படும் தெரு நாய்கள் குமாரபாளையத்தில் உள்ள கூடத் தில் பராமரிக்கப்பட்டு, அதன் பிறகு  பிடித்து வரப்படும் அனைத்து நாய் களுக்கும் கருத்தடை செய்யப்பட உள்ளது என நகராட்சி நிர்வாகத்தி னர் தெரிவித்தனர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட நடவடிக்கையை தொடர்ந்து, தெரு நாய்கள் பிடிக்கப் படுவதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

முன்னதாக, பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக் குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் பெருமாள் தலைமை ஏற்றார். கோரிக்கை களை விளக்கி கட்சி மாவட்டக் குழு  உறுப்பினர் படைவீடு பெருமாள் உரையாற்றினார். இதில், கட்சியின்  ஒன்றியச் செயலாளர் எம்.லட்சும ணன், மாவட்டக் குழு உறுப்பினர்  ஆர்.ரவி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் இ.கோவிந்தராஜ், எம். நவீன் மற்றும் கிளைச் செயலாளர் கள் மல்லேஷ்வரன், முருகேசன், ராஜகோபால் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.