districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: ஒலிப்பான்கள் பறிமுதல்

நாமக்கல், டிச.7- போக்குவரத்து விதிகளுக்கு மாறாக அரசு மற்றும் தனியார்  பேருந்துகளில் பொருத்தப்பட்டி ருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் வழியாக சேலம்,  நாமக்கல், ஈரோடு, சென்னை உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  சென்று வருகின்றன. இந்நிலை யில், பேருந்துகளில் போக்குவ ரத்து விதிகளுக்கு மாறாக, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூ டிய ஒலிப்பான்களை வாகன ஓட்டு நர்கள் பயன்படுத்தி வருவதாக, தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந் தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  பள்ளிபாளையம் சங்ககிரி சாலை யில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் களை பயன்படுத்தி ஒலி எழுப்பிய தாக அப்பகுதி பொதுமக்கள் தனி யார் பேருந்தை சிறை பிடித்தனர். மேலும், இதுகுறித்து தீக்கதிரில் வெள்ளியன்று செய்தி வெளியான நிலையில், குமாரபாளையம் வட் டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள் மலர் விழி, செந்தில்வேல், பெருமாள் உள்ளிட்டோர் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் சனி யன்று திடீர் சோதனை மேற் கொண்டனர். 15 அரசு மற்றும் தனி யார் பேருந்துகளை சோதனை மேற் கொண்டதில், அதில் 11 வாகனங்க ளில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அத்தகைய ஒலிப்பான்களை அதி காரிகள் பறிமுதல் செய்து, வாகன  ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த னர்.