நாமக்கல், டிச.7- ராசிபுரம் – திருச்செங்கோடு தேசிய நெடுஞ்சாலையோரம் மண்டி கிடக்கும் புதர் களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள எலிமேடு என்ற ஊர் தெருக் கூத்து கலைக்கு பிரசித்தி பெற்றது. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்க ளில் உள்ள கிராமங்களில் நடைபெறும் பண் டிகைகளுக்கு எலிமேடு பகுதிகளில் இருந்து தெருக்கூத்து கலைஞர்கள் விழா ஏற்பாடு கள் செய்வது வழக்கம். ஏராளமான கிரா மங்களில் இருந்து கூத்துகலைஞர்களை சந்திக்க வரும் இவ்வூர் ராசிபுரம் திருச் செங்கோடு தேசிய நெடுஞ்சாலையை மையப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங் களாக அதிக மழைப்பொழிவு காரணமாக சாலைகளின் இருபுறமும் செடிகள், மரங்கள் புதர் போல் வளர்ந்து கிடக்கிறது. இத னால் தகவல் வழிகாட்டியாக உள்ள எலி மேடு என்ற பலகை மற்றும் சாலையோரங் கள், செடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. மேலும், எதிரே வரும் வாகனம் கூட தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையோரம் மண்டி கிடக்கும் புதர் களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எலச்சிபாளை யம் மேற்கு ஒன்றியக்குழு வலியுறுத்தியுள் ளது.